வடகிழக்குப் பருவமழை எப்போது தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன?
வடகிழக்குப் பருவமழை நவ.9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை நவ.9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. நவ.9-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரம் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நவ.9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெர்வித்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(நவ.4) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கும்,
தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.