நவ.9ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்!
நவம்பர் 9-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுநவ.9ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்!
நவம்பர் 9-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 9-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,
இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட மயிலாடுதுறை, திருவள்ளூர், தஞ்சை, நாகை, தென்காசி, தேனி, திண்டுக்கல்,கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.