தமிழ்நாடு

பாதுகாப்பற்ற கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: அன்பில் மகேஷ் பேட்டி

DIN

 
தஞ்சாவூர்: பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, கடந்த காலங்களில் வழங்கிய அறிவுரைகள் போல், தற்போதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளி கட்டடங்களில் எங்கே தண்ணீர் வடிகிறதோ, மேலும், ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விடுங்கள் என கூறியுள்ளோம். 

பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டுகளை கண்காணிக்க வேண்டும், பழுதடைந்துள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு உள்ளோம். கிராமப்புற உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்க  கூடாது என வலியுறுத்தியுள்ளோம். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT