இது வெறும் டிரெய்லர்தானாம்! தரமான மழை 11-14ஆம் தேதியில் காத்திருக்காம்! 
தமிழ்நாடு

இது வெறும் டிரெய்லர்தானாம்! தரமான மழை 11-14ஆம் தேதிகளில் காத்திருக்காம்!

அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்வதெல்லாம் வெறும் டிரெய்லர்தானாம். தரமான மழைச் சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்வதெல்லாம் வெறும் டிரெய்லர்தானாம். தரமான மழைச் சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நன்கு வெயில் அடிப்பதும் திடீரென எங்கிருந்துதான் வந்தன என்று தெரியாமல் ஒரு அடர்ந்த கரிய நிற மேகங்கள் சூழ்ந்துகொண்டு மழையைக் கொட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சிறுகுறிப்பு கொடுத்துள்ளார்.

அதில், இங்கே மழை, அங்கே மழை என்பது போன்ற நிலவரங்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு நீடிக்கும். பெரும்பாலும் நிலா வந்த பிறகே மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அது காலை விடியும் வரை நீடிக்கலாம். இதெல்லாம் வெறும் டிரெய்லர்தான். 

உண்மையான தரமான சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காத்திருக்கின்றன. அதுவும் கடந்த வாரத்தைப் போல தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

அதுவும் குறிப்பாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளாக இருக்கும். சென்னை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்யும். கனமழை பெய்யும் பகுதிகளில் சென்னை மிக முக்கிய பகுதியாக இருக்கலாம்.

பார்ப்பதற்கு, இது நவம்பர் 1அம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பெய்த மழையைக் காட்டிலும் மிகப்பெரிய மழை நாள்களாக இருக்கும் என்றுதான் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, வானிலை ஆய்வு மையமும் நவம்பர் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT