தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும். 

சென்னையில் நாளை கனமழையும், நவ.11, 12 ஆகிய தேதிகளில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்  என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட மயிலாடுதுறை, திருவள்ளூர், தஞ்சை, நாகை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

இந்த ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

தொலைக்காட்சி சேனல்களின் வருவாயை மேம்படுத்த புதிய டிஆா்பி வழிகாட்டுதல்கள்!

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

SCROLL FOR NEXT