தமிழ்நாடு

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்!

DIN

தஞ்சாவூர்: திருச்சிற்றம்பலத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை- மதுரை, பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் செளகான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

தொடர்ந்து மாட்டுவண்டிகள் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் மாட்டு வண்டிகள் அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டு திருச்சிற்றம்பலம் சாலைகள் மற்றும் கடைவீதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதால்  போலீசாருக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT