மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த ட்விட்டர் பதிவில், 'மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' எனக் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.