தமிழ்நாடு

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு!

DIN

மதுரை, அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து குறித்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும் அவர் கூறினார். 

மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவியாக 5 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT