ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைய நான்குவழிச் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம்  இன்றி வெறிச்சோடியது. 
தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை...  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை முதல் தொடர் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை முதல் தொடர் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
 
வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை வாரச்சந்தையில்  தொடர் மழையில் வியாபாராமின்றி தவித்த விவசாயிகள், வியாபாரிகள்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை முதல் தொடர் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை  முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

இந்த தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய பெரிய வாரச் சந்தையான வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடைகள் போடமுடியாத  நிலையில் ஒரு சில கடைகள்  மட்டுமே  இயங்கி வெறிச்சோடி  காணப்படுகிறது. இதனால்  விவசாயிகள்,  வியாபாரிகள் வியாபாரமின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT