அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4 குழுக்களின் வீரர்கள் 
தமிழ்நாடு

கனமழை முன்னெச்சரிக்கை... 4 மாவட்டத்திற்கு விரைந்த தேசிய மீட்புப் படை வீரர்கள்!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நான்கு மாவட்டத்திற்கு தேசிய மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். 

DIN

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நான்கு மாவட்டத்திற்கு தேசிய மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். 

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக  கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4 குழுக்களின் வீரர்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்திற்கு தலா 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் படை பிரிவின் கமாண்டன்ட் அருண் அவர்கள் உத்தரவின் பேரில் விரைந்து சென்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT