தமிழ்நாடு

சென்னையில் நிரம்பும் ஏரிகள்! நீர்மட்டத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

DIN

சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதையொட்டி, செம்பரம்பாக்கம், வீராணம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. 

இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர்மட்டத்தை குறைத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏரி, குளம், குட்டைகள் என 175 நீர்நிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT