ஆத்தூர் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!
சேலம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பார்சல் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சேலம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பார்சல் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல் லாரி பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்பக்கம் தீ பிடித்தது. உடனே, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி ஓடிச் சென்றார். இதனால் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
பின்னர் இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்து பொருட்கள் ஏதும் சேதம் இன்றி மீட்டு, வேறொரு பார்சல் லாரியில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
இதனால் இப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.