தமிழ்நாடு

பராமரிப்புப் பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரயில்வே கேட் மூடல்! வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியுற்றனர். 

DIN

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியுற்றனர்.

தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட், தண்டவாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (நவ.11) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை 8 மணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்வே கேட் மூடப்பட்டதால், தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், மற்றும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேரபட்டணம், சடையப்பபுரம் வழியாக பாவூர்சத்திரம் வந்து வழக்கமான சாலையிலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வவிநாயகர்புரம் வழியாக பிரதான சாலையில் வந்தடைந்து வழக்கமான பாதையிலும் சென்றது. 

மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் சுமார் 15 முதல் 25 நிமிடங்கள் வரை கூடுதல் பயண நேரம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT