பட்டமளிப்பு விழாவில் காந்தி குல்லா
காந்திகிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலையில் காந்தி குல்லாவை அணிந்திருந்தனர்.
காந்திகிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலையில் காந்தி குல்லாவை அணிந்திருந்தனர்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார். பின்னர் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி சாலைவழி மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக பிரதமர் மோடி வருகையையொட்டி திண்டுக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலையில் காந்தி குல்லாவை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.