தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது! வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

DIN

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம்(நவ. 9) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. 

இதன் காரணமாக தமிழகம், புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவ. 10 முதல் 13 ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை(நவ. 12) அதிகாலை தமிழகம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT