பாவூர்சத்திரம்: தென்காசி - கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை வெள்ளிக்கிழமை (நவ. 11) நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழ நடைபெறும். ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை (நவ.11) இப்பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு பக்தா்கள் மலை உச்சியிலுள்ள சுனையிலிருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடா்ந்து, சப்த கன்னியா்கள், விநாயகா் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், மலையடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது.
முன்னதாக, மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வெங்கடாம் பட்டி, வெய்க்காலிப்பட்டி, சின்னகுமார்பட்டி, மயிலப்பபுரம், தேரி குடியிருப்பு, ராசப்ப நாடானூர், அரியப்பபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.
சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.