அக்காமலை காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் கூட்டம் 
தமிழ்நாடு

வால்பாறை அருகே அக்காமலையில் காட்டுயானைகள் கூட்டம்: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!

வால்பாறை அருகே அக்காமலையில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

DIN

வால்பாறை அருகே அக்காமலையில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் என உள்ளது. அடர் வனப்பகுதி அருகில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியைவிட்டு வனவிலங்குகள் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்டவை தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் தென்படுகிறது.

காட்டுயானைகள் அருகில் உள்ள கேரளம் வனப்பகுதியைவிட்டு தமிழக வனப்பகுதி முடிஸ், சின்கோனா, நல்ல காத்து, நல்ல முடி, குரங்கு முடி, சோலையார் என பிற பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. 

அக்காமலை எஸ்டேட் பகுதியில் பத்தாம் நம்பர் காட்டுப் பகுதியில் ஒரே நேரத்தில் ஆறு குட்டிகளுடன் 20 காட்டு யானைகள் தேயிலை காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளது. 

எனவே, யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை அப்பகுதி ஒட்டியுள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

SCROLL FOR NEXT