தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

IANS

சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கையில்,

வரும் நாள்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள தண்டல், நாரவாரிக்குப்பம், கழனி, கிராண்ட்லைன், வடகரை, புழல், வடபெரும்புக்கம், மாத்தூர், வாசப்பூர், மணலி, சடையங்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 கிராமங்களுக்கு வெள்ள அபாயத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 569 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி, சோழவரம் நீர்த்தேக்கங்களை மாநில அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT