முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சனிக்கிழமை (நவ.12) மாலை 3 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட உள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வட கிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், சனிக்கிழமை (நவ.12) மாலை 3 மணிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. 

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.