முகப்பு
தமிழ்நாடு

10% இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது: அமைச்சர் பொன்முடி

பத்து சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: பத்து சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார். 

பத்து சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். 

மத்திய அரசு அவசர அவசரமாக பத்து சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாஜகவுக்கு சமூக நீதி கொள்கையில் நம்பிக்கை இல்லை.  

மேலும், பத்து சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது. பத்து சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →