வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி, குமுதா, மல்லிகா, வளர்மதி, பத்மாவதி, மல்லிகா ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவித் தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 
தமிழ்நாடு

சிதம்பரம் வெள்ள சேதங்கள்: நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்!

கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி உள்ள விளை நிலங்கள் மற்றும் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

DIN

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள வல்லம்படுகை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளின் குடியிருப்பு வாசிகளை சந்தித்து ஆறுதல் கூறி அப்பகுதி மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும் விளை நிலங்களில் மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள வல்லம்படுகை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு தமிழக முதல்வர் நலத்திட்ட உதவி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து வல்லம்படுகையில் ஜெயங்கொண்ட பட்டினம், பேராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

வடகிழக்கு பருவமழையால் சிதம்பரத்தில் 30 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளின் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குகிறார்.

வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி, குமுதா, மல்லிகா, வளர்மதி, பத்மாவதி, மல்லிகா ஆகிய 5 பேருக்கு வீடுகளுக்கான நிவாரண உதவித் தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, போர்வை, மளிகை சாமான் உள்ளிட்ட நிவாரண பொருள்களின் தொகுப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் சுமார் 2500 பேருக்கு இந்த நிவாரண பொருள்கள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT