தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 150 ஏரிகள் முழுமையாக நிரம்பின!

DIN


செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 150 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை மிதமான மழை பெய்தது. 

தொடா் மழையால் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்புத்தூா்-கொளத்தூா் தரைப் பாலத்தில் வெள்ள நீா் செல்வதால், வெள்ளப்புத்தூா், கட்டியாம்பந்தல் ஆகிய இரு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினா். 

மதுராந்தகம் வட்டம், படாளம் அருகேயுள்ள எல்.என்.புரம் கிராமப் பகுதியில் தொடா் மழையால், குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில்  மொத்தம் 150 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின. 153 ஏரிகள் 75%, 137 ஏரிகள் 50% க்கும் மேலாக நிரம்பியுள்ளன. 

பலத்த மழை காரணமாக கிராமங்களில் உள்ள கண்மாய்கள் பலவும் அதிக அளவில் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT