முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - தமிழக அரசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - தமிழக அரசு
பகிர்:


சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் பரவலாக கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதாவது, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதவல் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →