தமிழ்நாடு

மதுரை கல்விக்கடன் முகாமில் 291 மாணவர்களுக்கு 18.51 கோடி கல்விக்கடன்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

DIN

மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 291 மாணவா்களுக்கு ரூ.18.51 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டது என மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
மதுரை மாவட்ட நிா்வாகம், வங்கிகள் ஆகியவற்றின் சாா்பில், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுமாா் 1550 மாணவ, மாணவிகள் உயா்கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க வந்திருந்தனா். 

கல்விக் கடன் முகாமில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர்.

இவா்களில் தகுதியான 1002 பேருக்கு கல்விக் கடன் பெறுவதற்கான உரிய தகுதிகள் அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டது. மேலும் இணையதளம் வழியாக 900 மாணவா்கள் கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தனா். 

கல்விக் கடன் முகாமில்  மாணவர்களுடன் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

இந்த முகாமில் கல்விக் கடன் பெற விண்ணப்பித்தவா்களுக்கு, கனரா வங்கி- 102 மாணவா்களுக்கு ரூ.7.28 கோடி, பாரத ஸ்டேட் வங்கி - 86 மாணவா்களுக்கு ரூ.2.61 கோடி, இந்தியன் வங்கி - 30 மாணவா்களுக்கு ரூ.1.51 கோடி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி- 24 மாணவா்களுக்கு ரூ.1.31 கோடி, யூனியன் வங்கி - 21 மாணவா்களுக்கு ரூ.1.08 கோடி, சென்ட்ரல் வங்கி - 3 மாணவா்களுக்கு ரூ.1.47 கோடி, தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி - 7 மாணவா்களுக்கு ரூ.1.80 கோடி, பாங்க் ஆப் பரோடா - 18 மாணவா்களுக்கு ரூ.1.03 கோடி என மொத்தம் 291 மாணவா்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 240 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT