தமிழ்நாடு

கடலூர் வெள்ள சேதங்கள்: நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்!

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது .

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் தாழ்வான இடங்கள், வயல்களில் அதிகளவு தண்ணீா் தேங்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 307.9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 3,325.80 மி.மீ. மழையும், சராசரியாக 133.03 மி.மீ. மழையும் பதிவானது. இருப்பினும், சனிக்கிழமை மழை ஓய்ந்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் 6,000 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளதாகவும், 208 கிராமங்களைச் சேர்ந்த 4,655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது. 

இதுபோல், காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 190 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் தேதி பெய்த கனமழையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 108 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது. இரண்டு முகாம்களில் மழையின் பாதிப்பு காரணமாக 97 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 43 கிலோமீட்டர் நெடுஞ்சாலைத்துறையில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 62 இடங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று கிராம பகுதிகளில் 231 பஞ்சாயத்துகளில் குடியிருப்புப் பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், தொடர் மழையால் பாதிப்பை ஏற்படுத்திய கடலூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். 

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரி வந்து தங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள புறப்பட்டார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் கடலூர் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு நிவாரண பொருள்கள் மற்றும் இடிந்த வீடுகளுக்கு அதன் தன்மைக்கேற்றவாறு மொத்தம் ரூ.72,400 நிதி உதவி வழங்கினார். 

நிகழ்வின் போது, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏ.,க்கள் சபா.ராஜேந்திரன், எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்(காங்கிரஸ்), மாவட்ட ஆட்சியர் கி.பாலசுபரமணியம், சார்-ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர்கள் சே.சுரேஷ்குமார்(குறிஞ்சிப்பாடி), ரா.பூபாலச்சந்திரன்(கடலூர்) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.  இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT