தமிழ்நாடு

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த 9-ம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது. 

இந்நிலையில் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் சுற்று மழை 20-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் புயலாக வலுவடையுமா என்று கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT