கோப்புப்படம் 
தமிழ்நாடு

வனப்பகுதிகளுக்குள் விடுதிகள்: உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது?

வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக விடுதிகள் அமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

DIN

வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக விடுதிகள் அமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத விடுதிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேகமலையில் சட்டவிரோத விடுதிகளை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமானத்தின் ஆவனங்களை ஆய்வு செய்து விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை உயர் நீதிமன்றக் கிளை நியமித்துள்ளது. தேனி வனத்துறை அலுவலருடன் இணைந்து வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கு தொடர்பாக தேனி ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு

பாலஸ்தீனம் மீது தாக்குதல்: காங்கயத்தில் ஆா்ப்பாட்டம்

அக்டோபா் 2-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்

கிருஷ்ணன் வக நிதி லிமிடெட் பங்குதாரா்களுக்கு 20 சதவீதம் ஈவுத்தொகை

SCROLL FOR NEXT