தமிழ்நாடு

ஒரே பயணச்சீட்டு: முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

DIN

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, ரயில்களின் பயணம் செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பணிக்கு வந்து செல்வோருக்கு ஏதுவாக மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ஒரே பயணச்சீட்டு திட்டம் குறித்து பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநகரப் போக்குவரத்து கழகம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தை இணைத்து கடந்த 2010ஆம் ஆண்டு பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கூட்டம் முதல்முறையாக கூடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT