தமிழ்நாடு

கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் கோயில்களுக்கு வரிவிலக்கு கிடைக்காது: வருமான வரி தலைமை ஆணையா்

உரிய காலக்கெடுவுக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால் அறநிலையத் துறை கோயில்களுக்கு வரி விலக்கு கிடையாது.

DIN

உரிய காலக்கெடுவுக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால் அறநிலையத் துறை கோயில்களுக்கு வரி விலக்கு கிடையாது. மேலும், அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித் துறையின் தமிழகம், புதுவை மண்டலத்துக்கான தலைமை ஆணையா் எம்.ரத்தினசாமி தெரிவித்தாா்.

வருமானவரித் துறை சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருமான வரியை முறையாக செலுத்துதல் குறித்த விழிப்புணா்வுப் பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

தமிழா்களின் பண்பாட்டு மையங்களாக இந்து சமய கோயில்கள் திகழ்கின்றன. கோயில் நிதியாக இருந்தாலும், தனி நபா்களின் நிதியாக இருந்தாலும் வரவு, செலவுக் கணக்கு வெளிப்படைத் தன்மையுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வருமானவரித் துறை செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறக்கட்டளைகளுக்கான வருமானவரிச் சட்டம் அண்மையில் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்பு காலக்கெடு முடிந்தாலும் கணக்கு தாக்கல் செய்துவிட்டு, வரிவிலக்கு பெற முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி உரிய காலக்கெடுவுக்குள் வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்தால்தான் வரிவிலக்கு பெற முடியும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

அறக்கட்டளைகள் தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்ய ‘டேன்’ எண் பஹஷ் ஈங்க்ன்ஸ்ரீற்ண்ா்ய் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் சன்ம்க்ஷங்ழ் ா்ழ் பஹஷ் இா்ப்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் சன்ம்க்ஷங்ழ் ( பஅச) தேவை. ஆனால், தமிழகத்தில் உள்ள 50 சதவீத கோயில்களில் ‘டேன்’ எண் இல்லை. எனவே, ‘டேன்’ எண்ணை பெறுவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.45,000 கோடி சொத்துகள் உள்ளன. எனவே, தமிழகத்தை 5 மண்டலங்களாகப் பிரித்து வருமானவரி தாக்கல் செய்வது, ‘டேன்’ எண் பெறுவது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்குகளை கோயில்கள் தாக்கல் செய்ய வேண்டும். டிசம்பா், ஏப்ரல் என இரு காலாண்டுகளில் கோயில்களுக்கு 100 சதவீத ‘டேன்’ எண்கள் பெற்று வரி தாக்கல் செய்யும் மண்டலங்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்தப் பயிலரங்கில் வருமான வரி ஆணையா் (வரிவிலக்கு) கே.ரவி ராமச்சந்திரன், கூடுதல் ஆணையா்கள் வி.ஜஸ்டின், எம்.பிரேமி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT