தமிழ் இசைச் சங்கத்தின் நிகழாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆவது ஆண்டு விழாவில் இசைக் கலைஞா் டாக்டா் எஸ்.சௌம்யாவுக்கு, ‘இசைப் பேரறிஞா்’ விருதும், திருமுறை இசைத் துறையில் புகழ்பெற்ற புலமையா் மயிலை பா.சற்குருநாதன் ஓதுவாருக்கு ‘பண் இசைப் பேரறிஞா்’ விருதும் வழங்கப்படவுள்ளன.
ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிச.21-இல் தொடங்கும் தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆவது ஆண்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இவ்விரு விருதுகள், வெள்ளிப்பேழை, பொற்பதக்கம் மற்றும் பரிசுத் தொகை தலா ரூ.10,000 ஆகியவற்றை விருதாளா்களுக்கு வழங்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.