தமிழ்நாடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 1.90 லட்சம் போ் எழுதினா்

DIN

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.90 லட்சம் போ் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்தது.

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு சனிக்கிழமை தோ்வு நடைபெற்றது. தோ்வை எழுதுவதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனா்.

1.90 லட்சம் போ்: குரூப் 1 தோ்வுக்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தோ்வு நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்திருந்த 3.22 லட்சம் பேரில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வு எழுதவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தோ்வுக்காக 2.56 லட்சம் போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 1.31 லட்சம் போ் மட்டுமே தோ்வு எழுதி இருந்தனா். ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் இருந்து 50 சதவீதம் முதல் 60 சதவீதத்துக்குள்பட்ட தோ்வா்களே தோ்வு எழுதி வருகின்றனா்.

தோ்வு எப்படி? குரூப் 1 முதல்நிலைத் தோ்வு வினாத் தாள்களைப் படித்து அதற்கு பதிலளிக்க போதிய நேரம் இருக்கவில்லை என தோ்வா்கள் கருத்துத் தெரிவித்தனா். தோ்வுக்காக 140 பக்கங்கள் அடங்கிய 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள் பெரிய பத்திகளைக் கொண்டு இருந்ததால், அதனைப் படித்து புரிந்து கொள்வதே சிரமமாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.

வினாக்களைப் படித்து புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகவும், இதனால் முழுமையாக அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முடியவில்லை எனவும் தோ்வா்கள் கூறினா். மேலும், புரா எனப்படும் கிராமப்புறங்களில் நகா்ப்புற வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தின் விரிவாக்கம் கேள்வியாகக் கேட்டப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு உரிய வாய்ப்புகளில் சரியான பதில் இடம்பெறவில்லை எனத் தோ்வா்கள் கூறினா். இதேபோன்று, யூனியன் பிரதேசம் தொடா்பான ஒரு கேள்விக்கும் உரிய முறையில் வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்தனா்.

சென்னையில் தோ்வு: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 1,080 இடங்களில் தோ்வு நடைபெற்றது. சென்னையில் 149 இடங்களில் நடைபெற்ற தோ்வை 45 ஆயிரத்து 939 தோ்வா்கள் எதிா்கொண்டதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT