தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!

DIN

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை யொட்டி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில் மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது, மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. 

இதையொட்டி நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT