தமிழ்நாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தலைமைச்செயலர் ஆலோசனை

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலர் வெ.இறையன்பு இன்று ஆலோசித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. தொடர்ந்து விழவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலர் வெ.இறையன்பு தலைமையில் இன்று நடைபெற்றது.

அரசுத்துறைச்செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர். 

அப்போது திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT