தமிழ்நாடு

கிஷோர் கே சுவாமிக்கு டிச. 5 வரை நீதிமன்றக் காவல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமிக்கு டிசம்பர் 5 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமிக்கு டிசம்பர் 5 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட கிஷோர் கே சுவாமி, திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

ஏற்கனவே திமுகவின் முன்னாள் முதல்வர்கள், பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டது என மொத்தம் 7 வழக்குகளில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு ஜூன் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் கே சுவாமி மீண்டும் ட்விட்டரில் அரசியல் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி மழை வெள்ளத்தின்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையிலும், புளியந்தோப்பு( டேஷ்) என தகாத வார்த்தையால் பேசி டிவிட்டரில் கிஷோர் கே சுவாமி பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு முதல்வர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகக் கூறி எழும்பூரைச் சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த 3 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல், கலகத்தைத் தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும்படி கிஷோர் கே சுவாமிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் சம்மனுக்கு ஆஜராகாமல், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கிஷோர் கே சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் இன்று கிஷோர் கே சுவாமியை புதுச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு டிசம்பர் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT