2022-23ஆம் ஆண்டுக்கான கனவு இல்லத் திட்டத்திற்கு பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, “தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு, ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ்,
தேர்வு செய்யப்பட்ட இந்த பத்து எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.