அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க உத்தரவு 
தமிழ்நாடு

அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க உத்தரவு

தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி சேவையில் இடையூறு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

DIN

அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி சேவையில் இடையூறு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரு நாள்களாக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். அதேவேளையில் கேபிள் டிவி உரிமையாளா்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனா்

இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியாா் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது.  மாநிலம் முழுவதும் 22 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அந்த நிறுவனம் முடக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி சேவையில் தனியாா் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக எழுந்த புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் நிா்வாகி ராஜன் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

SCROLL FOR NEXT