அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
மாநகரப் பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் எதிரொலியாக போக்குவரத்து கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் பொதுமக்கள் வழங்கும் ரூ.10, ரூ.20 நாணயங்களை வழங்கும்போது நடத்துநர்கள் அதனை மறுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாணயங்களை வாங்க மறுத்தால், துறை சார்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறூவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பதோ சட்டப்படி குற்றம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.