முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
வருமான வரித் துறை
பகிர்:

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பொது விநியோக திட்டத்திற்கு உணவுப்பொருள்களை அதிக அளவு சப்ளை செய்யும் ஐந்து நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெற்று வரும் நிறுவனங்கள் அனைத்திலும் பாமாயில் இறக்குமதி செய்ததற்கான முறையான கணக்குகள் இல்லாதது மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும், சோதனை முடிந்த பிறகுதான் மொத்த வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணம் எவ்வளவு என்பது தெரிவரும் என்று அதிகாரி கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →