குன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் காயம்
குன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரித்து வருகின்றன.
படிக்க: சமந்தாவுக்கு என்ன ஆச்சு? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
வெல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.