முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!

தங்கம் விலை தொடர்ந்து 6 நாள்களாக குறைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
பகிர்:

தங்கம் விலை தொடர்ந்து 6 நாள்களாக குறைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.39,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 அதிகரித்து ரூ.4,351-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு அதிகரித்து ரூ.68.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.68,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெடரல் வங்கியின் முடிவுக்காக கடந்த சில நாள்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து வந்ததால் தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் மீது மீண்டும் தங்களது கவனத்தை திருப்பியுள்ளதை அடுத்து தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்: 
1 கிராம் தங்கம்...............................ரூ.4,351
1 சவரன் தங்கம்............................. ரூ.39,448
1 கிராம் வெள்ளி............................ ரூ.68.20
1 கிலோ வெள்ளி............................ ரூ.68,200

புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. ரூ.4,885
1 சவரன் தங்கம்...........................  ரூ.39,080
1 கிராம் வெள்ளி..........................  ரூ.67.00
1 கிலோ வெள்ளி.........................  ரூ.67,000

முழு கட்டுரையைப் படிக்க →