கோப்புப் படம் 
தமிழ்நாடு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் என்ஐஏ விசாரணை

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

DIN

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது. 

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தற்போது மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT