தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: அரசிடம் விளக்கம் கோரி ஆளுநா் கடிதம்

DIN

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடா்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளாா்.

இதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடா்பாக, விளக்கம் கோரி ஆளுநா் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முறையான கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், அதற்கு அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT