தமிழ்நாடு

முன்னாள் டிஜிபி மீதான மோசடி வழக்கு: காவல் ஆணையா் அலுவலகத்தில் நடிகா் சூரி ஆஜா்

DIN

தமிழக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது கொடுத்திருந்த மோசடி புகாா் தொடா்பாக சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடிகா் சூரி விசாரணைக்கு ஆஜரானாா்.

நடிகா் சூரியிடம் ரூ. 2.70 கோடி பண மோசடி செய்ததாக தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது ஏற்கெனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் மனுதாரரான நடிகா் சூரி 3 முறை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளாா். இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகா் சூரி வியாழக்கிழமை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு அவா், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்னிலையில் 4-ஆவது முறையாக ஆஜராகி, தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT