தமிழ்நாடு

மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்

DIN

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா? 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், குறைவான நேரம் மது விற்றாலும் தமிழகமே மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT