தமிழ்நாடு

ஆதார் இணைக்கப் பணம் வசூலித்தால் நடவடிக்கை: மின் வாரியம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன.

இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

வரும் டிசம்பர் 31ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்கள் மூலமும் பொதுமக்கள் பலர் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், மின் வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு முகாமுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

கணினியில் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்

காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இடைவெளியின்றி பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன் மோதல்! கிரிக்கெட் சண்டையையும் டிரம்ப் நிறுத்தினாரா?

ஐசிசி தரவரிசை: இதுவரை இல்லாத உச்சத்துக்கு முன்னேறிய சிராஜ்!

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!

SCROLL FOR NEXT