தமிழ்நாடு

2019-2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது குறித்து ஆய்வு: தமிழக அரசு தகவல்

2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியானோருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

DIN

2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியானோருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியில்லாத பலருக்கு அவசரகதியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஆய்வு செய்து தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளை திரும்பப் பெறக்கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 

நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முந்தைய விசாரணையில், நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இன்றைய விசாரணையில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. 

அதன்படி, 2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியானோருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறியுள்ளது. 

இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT