திருச்சி ஆட்சியரகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். 
தமிழ்நாடு

திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் தர்னா போராட்டத்தால் பரபரப்பு! 

பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

திருச்சி: பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்திருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய நலச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

கடந்தாண்டு பெய்த மழையால் அழிந்த பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். காவிரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து அய்யாற்றில் திருப்பும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போலீசாரும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவத்தால் ஆட்சியரகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT