தமிழ்நாடு

தேசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

DIN

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களைக் குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 12 பதக்கங்கள் பெற்று தமிழகம் 4 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் தமிழகம் மேலும் பதக்கங்களை குவிக்க வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், தேசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகம் சார்பில் 380 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். 12 பதக்கங்களை வெற்றி பெற்று தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. நம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT