தமிழ்நாடு

மியான்மரிலிருந்து சொந்த ஊர் திரும்பும் 13 பேர்: ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி

DIN

மியான்மரில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சகோதரர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 சகோதரர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 
மேலும் தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிக்கொண்ட சகோதரர்களை  மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் அவர்கள் மியான்மரில் சிக்கிக்கொண்ட  தகவல் அறிந்த உடனே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிக்கிக்கொண்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

21/09/2022 அன்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிக்கிக்கொண்டவர்களை பற்றிய தகவல்களையும்,  அவர்களை மீட்பதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

மற்ற சகோதரர்களையும்   மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவர் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT