திமுக தலைவா் பதவிக்கு மு.க.ஸ்டாலின் நாளை மனுதாக்கல்
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை (அக். 7) மனுதாக்கல் செய்கிறாா்.
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை (அக். 7) மனுதாக்கல் செய்கிறாா். இதேபோன்று, பொதுச் செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கும் மனுக்கள் பெறப்பட உள்ளன.
இந்தப் பதவிகளுக்கு முறையே அமைச்சா் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோா் மனுக்களை அளிக்கவுள்ளனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்பட உள்ளன.
இதைத் தொடா்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா், நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்கள் தொடா்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சந்திப்பு: முன்னதாக, திமுக மூத்த தலைவா் ஆா்க்காடு வீராசாமியை அவரது இல்லத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.